Good Bye தேசப்பிரிய
நாட்டின் முக்கிய பதவி வகித்த வந்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன்(12.11.2020) தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
19 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தமது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மகிந்த தேசப்பிரியவின் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில், பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர ஆகியோர் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 20 ஆம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக புதிய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தவாரமளவில் நியமிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment