Header Ads



பிரசாந்தன் CID னரால் கைது


- பாறுக் ஷிஹான் -

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் னரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று (12) காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் கடந்த 2008  ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  பிணையில் அவர்  விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த படுகொலை  வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற  குற்றச்சாட்டின் தற்போது  கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

 ரி.எம்.வி.பி கட்சியின் தலைவர்  பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை சந்திரகாந்தனும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.