Header Ads



வீட்டினுள் உயிரிழக்கும் நபர் மீதும், பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் - சுகாதாரத் தரப்பு பிடிவாதம்

வீட்டினுள் உயிரிழக்கும் எந்தவொரு நபரின் சடலமும், மரண பரிசோதகரின் அல்லது நீதவானின் பரிந்துரையின் பேரில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். 

இந்த தீர்மானம் கொவிட் அவதானம் நிறைந்த பிரதேசங்களை போன்று, அவதானம் இல்லாத பிரதேசங்களுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்தார். 

வீடொன்றில் மரணமொன்று சம்பவிக்கும் போது சுகாதார பிரிவு மற்றும் கிராம உத்தியோகத்தரின் அனுமதியுடன் சடலம் தொடர்பான இறுதி சடங்குகளை நடாத்துதல் அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் தொடர்பான இறுதிக் சடங்குகளை மேற்கொள்ளல் பொதுவாக இடம்பெறும். 

எவ்வாறாயினும், இத்தினங்களில் வீடுகளில் உயிரிழக்கும் நபர் கொவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்படும் வரை சடலம் தொடர்பில் இறுதி சடங்குகளை மேற்கொள்ள முடியாது. 

சடலம் மீது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதா? இல்லையா? என்பது பிரதேசத்திற்கு பொறுப்பான மரண பரிசோதகர் அல்லது நீதவானின் பரிந்துரைக்கு அமைய இடம்பெறும். 

இதற்கு மேலதிகமாக கொவிட் தொற்று அவதானம் அதிகமாக காணப்படும் கொழும்பை அண்மித்த வைத்தியசாலைகளுக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழக்கும் அல்லது கொலை, தற்கொலை போன்ற இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டபோது கொவிட் சந்தேகம் காணப்பட்டால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும என அவர் தெரிவித்தார். www.jaffnamuslim.com

3 comments:

  1. நீங்க எப்ப சாவீங்க அய்யா ?

    ReplyDelete
  2. வீட்டில் இறந்தாலும் PCR பரிசோதனை செய்த பின் positive வரும் முஸ்லீம் என்றால். அடுத்தது உடல் எரிப்பு தான்.

    ReplyDelete
  3. corona is spreading , don't talk idiotically, next pcr test for you soon,

    ReplyDelete

Powered by Blogger.