Header Ads



தேர்தலில் தான் தோல்வியுற்றதை டிரம்ப், ஏற்க மறுப்பது எனக்கு தர்மசங்கடமாக உள்ளது - ஜோ பைடன்


நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியுற்றதை டிரம்ப் ஏற்க மறுப்பது தனக்கு தர்மசங்கடமாக உள்ளதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்துள்ளது.

இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார்.

இதுதொடர்பாக பைடன் மேலும் கூறியதாவது

டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. குடியரசுக் கட்சியினர் இறுதியில் எனது வெற்றியை ஒப்புக்கொள்வார்கள் என்று தான் நம்புகிறேன்.

ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன்.நடந்து விடும் என்ற பார்வையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.