சிவில் உடையில் பொலிஸார் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 158 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சுகாதார உத்தரவுகளை அமுல்படுத்துவதற்காக நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே தனிமைப்படுத்தல் சுகாதார உத்தரவுகளை மீறும் நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
குற்றவாளிகள் எனக் கருதப்படும் சந்தேக நபர்களுக்கு 10,000 ரூபா அபராதமும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment