Header Ads



ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ள ஐடியா


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியில் இருக்கும் நிலையில், தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை, அவர் நல்ல வருமானம் பார்க்க வாய்ப்புள்ளது என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, தொலைக்காட்சிகளும், புத்தக வெளியீட்டாளர்களும் அவருக்கு 100 மில்லியன் டொலர்கள் வருவாய்க்கு ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறார்கள்.

வெள்ளை மாளிகையில் செலவிட்ட காலகட்டம் குறித்து புத்தகம் எழுதுங்கள், பேட்டி கொடுங்கள், அள்ளித்தருகிறோம் டொலர்களை என தொலைக்காட்சிகளும் புத்தக வெளியீட்டாளர்களும் ட்ரம்புக்கு தொல்லை கொடுத்துவருகிறார்களாம்.

அதனால், இரண்டாவது முறை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால்கூட பரவாயில்லை, வருவாய் உருவாக்க நாக்கள் தயார் என்கிறார்கள் தொலைக்காட்சி அதிபர்களும் புத்தக வெளியீட்டாளர்களும்.

உங்களுக்கு 70 மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளன, அந்த வாக்குகளை புத்தக விற்பனையாக மாற்றுங்கள் என்று கூறும் புத்தக வெளியீட்டாளர்கள், உங்களை எதிர்த்து எழுதப்பட்ட புத்தகங்களே பயங்கரமாக விற்கின்றன என்றால், நீங்கள் ஒரு சூப்பர்ஹிட் பர்சனாலிட்டி, அதிபர் அவர்களே, என்கிறார்கள் அவர்கள். 

No comments

Powered by Blogger.