"அத்தியாவசிய ஆளணியை மாத்திரம் சேவைக்கு அழைக்கவும்"
தற்போது மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நாளை (09) நீக்கப்பட்ட போதிலும், அரச நிறுவனங்களில் அத்தியாவசியமான ஆளணியை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறி இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்க நிறுவனங்களில் கடமைகளை மேற்கொண்டு செல்வதற்கு அத்தியாவசியமான, மிகக் குறைந்த ஆளணியினரை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஆளணியினர் தொடர்பில், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய ஊழியர்கள், தற்போது உள்ள வகையில் வீடுகளிலிருந்து தமது அலுவலக கடமைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்துள்ளார்.
Post a Comment