இலவசமாக கிடைக்கும் காணியும், அதனை கண்டுக்கொள்ளாத நம்மவர்களும்
ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!!
ஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை!! மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!!
நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது!!
காணி கிடைத்தால் முழுநேர விவசாயம் தான் செய்யவேண்டியதில்லை!!! காணியில் வெறுமனே விவசாயம் மட்டும் தான் செய்ய முடியும் என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்!!
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக்கொள்வார் அல்லது பயன்படுத்திக்கொள்வார்!!
யாரோ வத்து குடியேறிய பின், ஆர்ப்பாட்டம், அரசியல்வாதி என்று ஓடித்திரியாமல், இப்போதே விழித்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக வடகிழக்கு பகுதிகளில் அதிகம் அரச காணிகள் இருக்கின்றன.
அத்துடன் அரச காடுகளையும் பயன்படுத்திக்கொள்ள மாவட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வாய்ப்பு இளைஞர்கள் பயன்படுத்தாவிடின் நாளை இதன் விளைவுகள் உங்களுக்கு எதிராகவும் எங்கள் அரசியல் கட்சிகள் இவ்வாறான தேவையான நேரங்களில் அடைகாத்துவிட்டு, பின்னர் மக்களை திரட்டி தங்கள் அரசியலுக்காக கூச்சலிடும் சூழலை மட்டுமே விட்டுவைக்கும்..
சரி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்??
45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்!!
நீங்கள் எந்த தொழில் செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!!
விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டு இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன..
நீங்கள் செய்யவேண்டியது இதுதான். விண்ணப்பங்களை
நிரப்பி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்!!
காணி எந்த பிரதேச செயலர் பிரிவில் தேவை என்று விண்ணப்பிக்கிறீர்களோ அந்த பிரதேச செயலர் பிரிவுக்கு விண்ணப்பங்களை அனுப்புங்கள்
முதலில் காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள்!! செய்யக்கூடிய வேலைகள் ஏராளம் உள்ளன!!
ஒரு சமூகமாக நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வோம்
சிந்திப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
Athambawa Jaleel
அரசாங்கத்திட்கு நட்பெயர் கிடைத்துவிடும் என்பதால் எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை ஊக்கப்படுத்தாமல் இருக்கின்றார்கள் .எனவே முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
ReplyDeleteHave we lot of Land?
ReplyDelete