Header Ads



வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில், உள்ளவர்களின் முக்கிய கவனத்திற்கு


வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கொவிட் நோயாளி என சந்தேகிக்கிற அல்லது தொற்றாளருடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கொவிட் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் காண்பிக்காத நபர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பதே வீட்டு தனிமைப்படுத்தல் என்பதாகும். 

கொவிட் நோயாளி ஒருவர் கடைசியாக தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் திகதியிலிருந்து குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார். 

அந்த வகையில் நீங்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட ஒருவராக இருந்தால், உங்களுடைய மற்றும் பொது மக்களின் நலனுக்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய சில சுகாதார வழிக்காட்டிகள்; உள்ளன. 

முதலில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது வெளியாட்களை வீட்டிற்குள் அனுமதிக்கவோ கூடாது என்பது முக்கியம். 

ஒருவர் கொவிட் நோயாளியுடன் தொடர்புப்பட்டவர் என கருதினால் அவரை வீட்டிலுள்ள ஒரு தனி அறையில் தங்க வைக்கவும், முடிந்தவரை அவருக்காக ஒரு தனி குளியலறை மற்றும் கழிப்பறையைப் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியம். 

அவ்வாறு செய்வது சிரமான என கருதப்படும் சந்தர்ப்பங்களில், தொற்றாளர் பிடித்த குழாய், கதவு கைப்பிடி போன்றவற்றை சோப்பு அல்லது வேறு தொற்று நீக்கிகளை உபயோகித்து சுத்தம் செய்வது கட்டாயமாகும். 

தொற்றாளரின் பயன்படுத்தும் படுக்கை துணி, துவாய், உள்ளிட்ட துணிகள் மற்றும் உணவு உண்ண பயன்படுத்தும் பீங்கான், கரண்டி, முட்கரண்டி போன்றவை எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும், மேலும் பாத்திரங்களை சவர்காரத்தில் கழுவி நன்றாக தொற்று நீக்கம் செய்ய வேண்டியது அவசியம். 

தொற்றாளர் ஒருவர் வீட்டில் இருக்கும் போது வீட்டிற்குள் காற்று நன்றாக வர அனுமதிக்க வேண்டியது முக்கியமானது. 

தொற்றாளர் வீட்டில் ஏனைய குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் போது, முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதோடு ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேண வேண்டியதும் கட்டாயமாகும். 

அழுக்கு கைகளால் முகம், வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும், குறைந்தது 20 வினாடிகள் வரை சவர்காரம் இட்டு கைகளை கழுவ வேண்டும். 

முடிந்தால், வீட்டிலுள்ள அனைவரின் உடல் வெப்பநிலையையும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது அளவிடுவது நல்லது. 

வீடுகளில் வயதானவர்கள், நோயாளர்கள் இருப்பார்களானால் முடிந்தவரை அவர்களை விலக்கி வைத்திருப்பது நல்லது என்பதுடன் அவர்கள் உரிய கிரமத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம். 

நீங்கள் பயன்படுத்திய டிசு காகிதம், முகக் கவசங்கள் போன்றவற்றை ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு இட்டு அப்புறப்படுத்த வேண்டும். 

சத்தான உணவை தவறாமல் உண்பது, ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது, நிம்மதியான உறக்கம் என்பனவும் அவசியமாகும். 

காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பிரதேச வைத்திய அதிகாரியை அல்லது பொது சுகாதார பரிசோதகரை விரைவாக நாட வேண்டியதும் அவசியமானதாகும்.

No comments

Powered by Blogger.