Header Ads



நிதானமாகவும், துஆவுடனும் கருமமாற்றுவோம்


- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -

இலங்கை முஸ்லிம் சமூகம் நீண்ட எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் இருந்த ஒரு விவகாரமே கொரோனாவில் மரணிக்கும் எமது உறவுகளின் ஜனாஸாக்களை தகனம் செய்வதில் இருந்து காத்து, முறையாக அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதாகும்.

அந்த அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்கள், துறைசார்ந்த நிபுனர்கள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் எனப் பலரும் பல அமைப்பில் இரவு பகலாக முயற்சி செய்தனர் என்பது யாவரும் அறிந்த விடயமே. 

அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!

எமது அனைவரதும் முயற்சியின் பயனாக அடக்கம் செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை தருவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அந்த அனுமதியைத் தருவதற்கு தீர்மானித்துள்ள அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அங்கத்தினருக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.

அரச தீர்மானங்கள் முiறாய அமுல் படுத்தப்படுவதற்கு கால தாமதம் ஏற்படுகின்றமை தவிர்க்க முடியாதவையாகும். 

இது பற்றி எவர் மூலம் அறிவித்த அல்லது தகவல் வழங்கிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் பட்சத்தில் பதட்டமோ, பீதியோ அல்லது உச்சகட்ட சந்தோஷமோ அடையாது, சகோதரத்துவ இனங்களின் வெறுப்பிற்குக் காரணமாகவோ அமைந்திடாது, அதிகமாக துஆக்களிலும் அமல்களிலும் ஸதக்காக்களிலும் ஈடுபடுவோமாக!

இதற்காக இறுதி வரையில் முயற்சி செய்த அனைவருக்கும் முஸ்லிம் சமூகம் சார் நன்றிகள், துஆக்கள் உரித்தாகட்டும்.

No comments

Powered by Blogger.