ஆக குறைந்த பணபரிமாற்றத்தில், ஈடுபடுமாறு அறிவுறுத்தல்
புதிய கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஆக குறைந்த பணபரிமாற்றத்தில் ஈடுப்படுவது முக்கியமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இது தொடர்பாக தெரிவிக்கையில், புதிய தொழில்நுட்ப கொடுப்பனவு முறையில் ஈடுப்படுதல் அல்லது பணபரிமாற்றத்தை மேற்கொண்ட பின்னர் கை கழுவுவதன் மூலம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.
பணம் மாத்திரம் இன்றி பொருட்களை பரிமாறும் போதும் சுகாதார பாதுகாப்பு முறையை கடைப்பிடித்தல் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment