நாட்டு மக்களுக்கும், உலக வாழ் மக்களுக்கும் ஆசிவேண்டி ஜனாதிபதி சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கும் உலக வாழ் அனைத்து மக்களுக்கும் ஆசிவேண்டி நேற்று (13) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருவன்வெலிமகாசேய புனித பூமியில் சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
ருவன்வெலிமகாசேய புனித பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி ருவன்வெலி ரஜமகா விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
ருவன்வெலிமகாசேய புனித பூமியில் சமயக்கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி பிரார்த்தித்தார். அங்கு விசேட பிரித் பாராயணமும் இடம்பெற்றது. மின் விளக்கு பூஜையும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ருவன்வெலி ரஜமகா விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் அநுசாசன உரை நிகழ்த்தி கொவிட் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறையினருக்கு ஆசிர்வதித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.11.14
Post a Comment