Header Ads



முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து, அரசு நல்ல முடிவை எடுக்கும் அறிவிக்கும் என நம்புகிறோம்


கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் நல்ல முடிவை எடுக்கும் அறிவிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நாட்டின் முஸ்லீம் சமூகத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இதற்கு உரிய தீர்வை முன்வைக்கும்; என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முஸ்லீம் சமூகத்தின் வேண்டுகோள்களை புறக்கணித்து சுகாதார அமைச்சு விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் உடல்களை புதைப்பது என்பது முஸ்லீம் மக்களின் மதநம்பிக்கையின் முக்கியமான பகுதி என அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. கட்சி மாறி பணத்துக்காக வாக்களித்த துரோக கும்பல்கள் இதில் குரல் கொடுத்தால் அது முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமையும்

    ReplyDelete
  2. This guy was mum on this issue all these time, suddenly, when government is reconsidering the matter, started talking about it just to get some credit out of it. He should be ignored completely.

    ReplyDelete
  3. முஸ்லீங்கள் பிரச்சினை என்று மட்டும் பார்க்காமல் புதைக்க விரும்புவோர் புதைப்பதற்கும் எரிக்க விரும்புவோர் எரிப்பதற்குமான போராட்டமாக மாற வேண்டும்.

    ReplyDelete
  4. This leader of SLMC and other Mislims in the parliament must protest and resign.If they have backbone they shpuld resign for the sake of Islam and community.Otherwise all muslims must ignore them If they cant get the right that is stipulated in the constitution what is the use of being called Muslim Mps?.The mislim ummah reject these turn coats from the community.Will the JU.take firm stand on them?.Niyas Ibrahim.

    ReplyDelete

Powered by Blogger.