முஸ்லிம்களின் உடல்களை அடக்கம்செய்ய, இடமளிப்பதை விரும்புகிறேன் - அமைச்சர் சந்திரசேன
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின்உடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதை தான் விரும்புவதாக, காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை நீதியமைச்சர்அலிசப்ரி அரசாங்கத்திடம்இது தொடர்பில்விடுத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்ப்புகள்முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கொரோனா வைரஸ் காரணமாக எவராவது இறக்கும் சந்தர்ப்பத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கோரிக்கை விடுத்தால், அதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழுவின் இறுதி அறிக்கைக்கு அமையவே முடிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
Good dicition
ReplyDeleteஇவ்வாறு நாலு பேர் பேசினால் இனவாதிகளின் மூர்க்கம் குறைவடையலாம். முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் கட்சி எதிர்க்கட்டசியிலுள்ள முஸ்லிமல்லாத அரசியல் நண்பர்களைக்கொண்டு இவ்வாறு பேசவைக்க முடியுமாக இருந்தாலே பெரும் விடயம். அடக்கம் செய்ய முடியாவிட்டாலும் நல்லிணக்கம் வளர்ச்சி பெறும் அடக்கத்திற்கு எதிரானவர்கள் பிற்போக்கு வாதிகளாக ஒதுக்கப்படுவர்.
ReplyDelete