முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா? புதைப்பதா? அரசின் நிலைப்பாடு என்ன? - குணதாச அமரசேகர கேள்வி
(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பொது தன்மையில் தீர்மானம் எடுக்க வேண்டும். வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வதா, அல்லது புதைப்பதா என்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் தரப்பினரும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருகிறார்கள்.
உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடல்கள் தகனம் செய்யும் போது இஸ்லாமிய மத உரிமை மீறப்படுவதாக குறிப்பிடுகிறார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் ஆகியோரது உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இதன் போது அவரவர் மத உரிமைகள் மீறப்படுகின்றன. நெருக்கடியான சூழ்நிலையிலும் மத காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. பின்னர் அந்த செய்தி தவறானது என அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. இதில் எது உண்மை என தெரியவில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்றார்.
மையத்தை புதைக்கவோ எரிக்கவோ தேவையில்லை. இவ்வாறான வெறியர்களுக்கு சாப்பிட கொடுத்தல் சிறந்தது
ReplyDeleteபுதைப்பதா அல்லது இல்லையா என்று அரசு எப்படி சொல்வது.
ReplyDeleteவாக்கு வாங்கி எப்படி அதிகரிக்கும் என்பதை பொறுத்து தான் உங்கள் விடைக்கு பதில் கிடைக்கும்.