ஜனாசா எரிகிறது..!!
- YLS ஹமீட் -
கடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ( துணைக்கட்சிகள் உட்பட) 150 ஆசனங்கள் கிடைத்தன. 20வது திருத்தத்திற்கு ஆளுக்கட்சிக்குள்ளேயே சிலர் எதிர்ப்பு. குறிப்பாக, விஜேதாச ராஜபக்கச, இவர் வாக்களிப்பிற்கு முதல்நாள்கூட, எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறியதாக ஒரு மதகுரு கூறினார். அதேபோல், விதுர விக்கரமநாயக்க, விமல், உதய ஆகியோரது கட்சிகள்.
இந்நிலையில்தான் நம்மவர்கள் உதவிக்குச் சென்றார்கள். எதிர்த்தவர்களும் தமது நிலைப்பாட்டை இறுதி நேரத்தில் மாற்றிக்கொண்டார்கள். ஏன் மாற்றினார்கள்? உண்மையான காரணம் நமக்குத் தெரியாது.
அவர்கள், ஆளுக்கொரு காரணத்தைக் கூறினாலும் பெரும்பாலும் உண்மைக்காரணம், தாம் எதிர்த்தாலும் திருத்தம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். எனவே, தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம்; என்கின்ற அச்சமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
ஆகக்குறைந்தது இரண்டொரு பேராவது அந்த அச்சத்தினால் தம் நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம். எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் 20 வென்றிருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.
குறித்த எட்டுப்பேரில் நம்மவர்கள் தவிர்ந்த ஏனைய இருவரும் வாக்களித்திருந்தாலும் பெரும்பாலும் பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஆளும்கட்சிக்குள் இரண்டொருபேராவது எதிர்த்திருந்தால். மட்டுமல்ல, நம்மவர் அறுவரும் திசைமாறாமல் இருந்திருந்தால் சிலவேளை அவ்விருவரும்கூட எதிர்த்து வாக்களித்திருக்கலாம், கட்சியில் இருந்து நீக்கப்படுவோம்; என்ற அச்சத்தில்.
இவர்களின் ஆதரவு அவர்களையும் தைரியப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்களும் துணிச்சலாக ஆதரவாக வாக்களித்திருக்கலாம். திருத்தம் நிறைவேறுவது என்பது வெறும் எண்கணிதம் அல்ல. அங்கு அரசியல் உளவியலும் இருக்கின்றது.
ஆரம்பமுதலே, நம்மவர்கள் ஆதரிக்கப்போகின்றார்கள்; என்பது பரகசியமாகிவிட்டது. இல்லையெனில் ஆளும் கட்சிக்குள் இருந்து இன்னும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கலாம். ஏனெனில், 20 இற்கெதிராக கணிசமான மதகுருக்களும் நாட்டு மக்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.
சுருங்கக்கூறின், நம்மவர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் பெரும்பாலும் 20, தோற்றிருக்கலாம். 20, நாட்டிற்கு நல்லதா? இல்லையா? முஸ்லிம்களுக்கு பிரத்தியேக பாதிப்பு உண்டா? இல்லையா? என்ற கேள்விகளுக்கப்பால் 20, தோற்றிருந்தால் ஆளும்கட்சிக்குள் பிளவுகள் தோன்றியிருக்கும்; ஆளும்கட்சி பலவீனமடைந்திருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் ஆட்சி முஸ்லிம்கட்சிகளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் அரவணைப்பை அதிகம் நாடியிருக்கும்.
குறிப்பாக, ஶ்ரீ சு கட்சியில் பலருக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை; என்ற அதிருப்தி இருக்கின்றது. அது அரசை இன்னும் பலயீனப்படுத்தியிருக்கும். அதனால் புதிய யாப்பு விடயத்தில், அல்லது அதற்கு முன் இந்த 20 இற்குப் பதிலாக இன்னுமொரு 20ஐக்கொண்டுவர முயற்சித்திருக்கலாம்; அதற்கு நமது ஆதரவு தேவைப்பட்டிருக்கும்.
எனவே, எவ்வகையிலேனும் முஸ்லிம்களை அரவணைக்கவேண்டிய தேவை ஆட்சியாளர்கட்கு ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சியில் இணைந்து போட்டியிட்டதால் எதிர்க்கட்சியிலேயே இருக்கவேண்டுமென்பது விதியல்ல. ஆனால் எதற்காக ஆளும்கட்சிக்கு ஆதரவளித்தோம்; சாதித்ததென்ன? என்பதுதான் கேள்வியாகும்.
ஆகக்குறைந்தது, இந்த ஜனாசா எரிப்பு வர்த்தமானியைத் திருத்துங்கள், நாங்கள் உங்கள் கட்சிக்கு எதிராகப் பேசித்தான் வாக்குப்பெற்றோம். இந்த ஜனாசா எரிப்பினால் எங்கள் மக்கள் மனம் வெதும்பிப் புண்ணாகி இருக்கிறார்கள். இதையாவது நீங்கள் செய்தால் எங்கள் மக்கள் சற்று ஆறுதலடைவார்கள். அந்த மக்கள் வாக்களிக்காமல் நாங்கள் பாராளுமன்றம் வந்திருக்கவும் முடியாது, நீங்கள் எங்களை நாடும் நிலை ஏற்பட்டிருக்கவும் முடியாது. எனவே, அதனைச் செய்யுங்கள் வாக்களிக்கிறோம்; என்றாவது கூறமுடிந்ததா?
எதைச் சாதித்தீர்கள்? ஆனாலும் சாதித்தீர்கள்! அந்நியவர்களால் முஸ்லிம் சமூகம் காறி உமிழப்படுமளவு சாதித்தீர்கள். ஏனைய மொழி ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில இணையத்தளங்களை வாசித்தவர்களுக்குத் தெரியும். எவ்வளவு துப்புக்கெட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் அரசியலையும் வர்ணித்தார்கள்; என்று.
அவற்றை வாசிக்கும்போது கூனிக்குறுக வேண்டிய ஒரு நிலை மானமுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்பட்டது. ஏன், உங்களையே எவ்வளவு கேவலமாக ஆளும்கட்சியில் உள்ளவர்கள் எள்ளிநகையாடினார்கள்.
இவர்களின் ஆதரவு எங்களுத்தேவையில்லை; விரும்பினால் வாக்களிக்கலாம்; என்றார்கள். உங்கள் சோற்றில்போட்ட உப்பு உங்களுக்கு உறைக்கவில்லை; வாக்களித்தீர்கள்.
இவர்கள் வாக்களித்தாலும் அமைச்சுப்பதவி வழங்கமாட்டோம்; என்றார்கள்.
அது ஒன்றுமில்லை. சும்மா கொசு கடிக்கிறது; என்று பின் கதவால் அமைச்சுப்பதவிகளுக்கு கெஞ்சிக்கொண்டு வாக்களித்தீர்கள்
உங்களைப்பற்றி என்னனென்னவெல்லாம் ஆளும்கட்சிக்காறர்கள் சொன்னார்கள். சில நேரங்களில் எங்களுக்கு காதுகேட்பதில்லை; என்பதுபோல்போய் வாக்களித்தீர்கள்.
சமுதாயத்தை சந்தி சிரிக்கவைத்தீர்கள்.
ஜனாசா எரிகிறது!!!
It's true sir
ReplyDeleteSome thing for Muslim deceptive politicians and community leaders to read, Insha Allah. With compliments from - "The Muslim Voice".
ReplyDeleteQUESTION - WILL THE MUSLIM COMMUNITY COME OUT AND SIGN THIS OPEN LETTER PUBLICLY TO MAKE IT A REALITY, Insha Allah?
Noor Nizam - Convener "The Muslim Voice".
The article/open letter:https://www.colombotelegraph.com/index.php/audi-alteram-partem-an-open-letter-to-minister-of-health/
Audi Alteram Partem: An Open Letter To Minister Of Health.
By A. M. Majeed Muzammil –
A. M. Majeed Muzammil
Dear Hon Minister of Health, Mrs. Pavithra Wanniarachi.
In the name of Justice, I write this letter on behalf of the beleaguered population of our two million strong Sri Lankan Muslim community.
The Muslims of Sri Lanka – descendants of as far and wide as Morocco to Java, who now constitute nearly 10 percent of the island’s population, have been a peace-loving community since their advent in the 7th century and have always played a part at the forefront in safeguarding the interests of Mother Lanka.
The outstanding contributions made by visionary Muslim political leaders to the country in general and the community in particular, are worthy of emulation. In the pre-independent era, T.B. Jayah played a historical role in the struggle for Independence. Such a stance prompted the Hon. Leader of the House SWRD Bandaranaike to pay the highest tribute referring to Jayah, when he said: “Credit for the attainment of independence should undoubtedly go to T. B. Jayah for his historic speech in passing the Dominion Bill”.
The Late Mudaliar Sinne Lebbe, MP for Batticaloa tabled a motion in the State Council on January 16th, 1948 suggesting that the Lion Flag of Sri Wickrama Rajasinghe which was taken to Britain in 1815, should be adopted as the official flag of free Lanka. Subsequently, Prime Minister D.S.Senanayake unfurled the Lion Flag at the Octagon (Pattirippuwa) during the Independence celebration held in Kandy on February 12th, 1948 – the same flag which is respected, honoured and held in high esteem by every citizen of Sri Lanka.
(Contd: below).
(Contd: from above.)
ReplyDeleteIt is this same Muslim community that is now traumatized by the government’s mandatory rules, which expressly states that cremation is even obligatory upon communities that usually honour their dead by way of burying, in line with the upholding of basic human rights, and that of which is taking place globally in every other country except Sri Lanka.
As you are a lawyer with legal background, I appeal sincerely and humbly to draw your attention to Article 12 of the Constitution of Sri Lanka which states that all persons are equal before the law and are entitled to the equal protection of the law. The article further notes that no citizen shall be discriminated against on the grounds of race and religion.
I would also like to draw attention to Article 27 of the International Covenant on Civil and Political Rights (ICCPR) on the rights of minorities stressing those religious minorities shall not be denied the right, in community with the other members of their group, to enjoy their own culture as well as to profess and practice their own religion.
Ironically, Sri Lanka is one of the signatories of the said Covenant which commits to respect the civil and political rights of individuals, including the right to life, freedom of religion, freedom of speech and freedom of assembly.
In Islam, human dignity is given pre-eminence and grants certain rights and privileges to humans before they are even born, and others after their death. We have a code of conduct for living, which includes very specific ways to dispose of our bodies upon death as we believe that our souls return to God once we depart from this earth.
Hence whether dead or alive, the human body must be given due respect and dignity. This importance of the human body is illustrated, for instance, in the Qur’ān 5:31. There, it is narrated that when Cain was unsure of how to deal with the body of his brother Abel—whom he had murdered—God sent a message in the form of a raven. God used the raven to dig the ground to bury another raven, thus indirectly showing Cain how to bury his brother’s body in a dignified way.
It is also established in Islamic beliefs that burying the dead is by way of honoring them due to the words of God when He enumerates His blessings upon man, “Did we not make the earth a home for the living and the dead” [77:25-26]
(Contd: below).
(Contd: from above).
ReplyDeleteMuslims consider burial as sacrosanct and burying the dead is a communal obligation which if fulfilled, the sin (in the lack of not performing duties) and responsibility is lifted from the rest of the community. Hence, the cremation of our dead comes as a painful and unnecessary mental anguish for the families of the victims of this virus, and for the community as a whole.
As per the WHO Guidelines on COVID-19, over 185 countries around the world including many predominantly Buddhist countries, have been burying the remains of victims. Moreover, neither there are no scientific data to support the claim that COVID-19 can spread through dead bodies nor any credible evidence of microbiological contamination of groundwater from burial.
The Muslim community of Sri Lanka is not seeking unjustifiable demands from the government. All what we are asking for is a dignified way of disposing of our dead by way of burial in line with our religious beliefs and obligations. From Islamic perspective, mandatory cremation is desecration of the deceased.
Hon Minister of Justice, we solicit your kind cooperation to offer redress to our community’s grievances and recommend the technical committee of your Ministry to rescind the mandatory cremation against the burial rights of Muslims on humanitarian grounds.
We sincerely hope the spirit of “Audi alteram partem” (Listen to the other side / Let the voice of the other side be heard as well) will prevail, and benevolence will supersede over intransigence.
Injustice anywhere is a threat to justice everywhere – Martin Luther King Jr.
NEENGA ELLARUM MP PADAVI LEADER PADAVI NDU ALAIWEEENGA.
ReplyDeleteபேரின அடிப்படைவாதிகள் தான் 20 ஐ எதிர்த்தவர்கள் அதனை வெற்றி பெறச்செய்தமை எமக்கொரு வெற்றிதான். இனவாதிகளுக்குத்தோல்விதான் என்ற ஒருபக்கமும் உண்டு. இனவாதம் பேசும் ஊடகங்களும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தேறியமையால் குழம்பிப்போய் ஊழையிடுவார்கள் தான் அவற்றைப் பார்த்து வெட்கமடையத்தேவையில்லை சந்தோஷமடையலாம். உங்கள் பாஷையில் சொல்வதென்றால் வாக்களித்தது சரியோ தப்போ எரிந்த உள்ளங்கள்?
ReplyDelete