Header Ads



முஸ்லிம்களின் உடல்களை தகனம்செய்வதை எதிர்த்த ஐ.நா. தூதுவரின் நிலைப்பாடு, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆற்றலை கொடுக்கும் - சந்திரரட்ன தேரர்


கொரோனாவினால் காவுகொள்ளப்படும் முஸ்லிம்களின் உடலங்களை தகனம் செய்யும் செயற்பாட்டை மாற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் விடுத்திருந்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கு எதிராக பிக்குமார் குழு ஒன்று விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

மக்கள் பொறுப்பு மையத்தின் தலைவர் ஜம்புராவல சந்திரரட்ன தேரர் இந்த விடயத்தை கண்டித்துள்ளார்.

அவர் தலைமையிலான குழுவினர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு சென்று இலங்கை விவகாரங்களில் ஹானா சிங்கரின் தலையீட்டை எதிர்த்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

கொரோனாவினால் காவுகொள்ளப்படும் உடலங்களை அகற்றுவதற்கான ஒரே வழி தகனம் மட்டுமே என்ற இலங்கை சுகாதார அமைச்சின் கூற்று குறித்து ஹானா சிங்கர் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் அரசாங்கத்தின் தகனம் என்ற முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எனவே ஹானா சிங்கரின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல, எந்தவொரு பகுத்தறிவு அடிப்படையுமின்றி அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றும் விதத்தில் அவர் செல்வாக்கை செலுத்தக்கூடாது என்று தமது மனுவில் ஜம்புராவல சந்திரரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம், இலங்கை நாட்டின் இறையாண்மையையும் நேர்மையையும் மதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதேவேளை ஹானாவின் கருத்து, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு தேவையற்ற செல்வாக்கையும் அதிக ஆற்றலையும் தரும் என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Hitler didn't listen to any one. Sri Lankan racists also the same. They are going to ruin the country.

    ReplyDelete
  2. Ape rate iwarai.haamudura rate winasa karanawa.

    ReplyDelete
  3. They are idiots so they dont want to listen anyone... How they connect the rights with terrorism..Offf God bless our country!!

    ReplyDelete
  4. இப்படியான போலித்தனமான விஷமத்தனமான மிலேச்சத்தனமான கருத்துக்களை முன்வைக்கும்போது கற்ற அறிஞர்கள் புத்திஜீவிகள் எவராக இருந்தாலும் பொருத்தமான எதிர்க்கருத்துக்களை இட வேண்டும். எமது நாட்டை புனிதமானதாக மாற்ற வேண்டும். இலங்கை பௌத்த நாடாக இருந்துவிட்டுப் போகட்டும். பௌத்த மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றி உண்மை மக்களாக புத்திசாலிகளாக முதலில் இங்கு வாழும் பௌத்த மக்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். யாரோ ஒரு அரசியல்வாதியின் அல்லது குறித்த அரசியல்வாதியின் அவரது சொந்த நலனிற்காக தங்கள் எடுபிடிகளாக மாறுவதனைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு மதத்தவரகளும் தமது மதம் சார்ந்த கொள்கைகளை எடுத்து நடக்கும்போது அந் நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்லும். எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.