Header Ads



அமைச்சு பதவி இல்லாமல் இருப்பது வேதனையாகவும், சிரமமாகவும் இருக்கின்றது - எஸ்.பி.


1994ம் ஆண்டு முதல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தான் பதவி வகித்து வந்துள்ளதாகவும் அனைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் பல சாதனைகளை படைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால், அமைச்சர் பதவி இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது மாத்திரமல்ல, சிரமமான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் சாதாரண அமைச்சராக இருக்கவில்லை எனவும் தாம் பொறுப்பு வகித்த விளையாட்டு, சமூர்த்தி, கமத்தொழில் அமைச்சுக்கள் ஊடாக பல ஆக்கப்பூர்வமான மற்றும் பலன் தரக் கூடிய பல வேலைகளை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது மாத்திரமல்லாது, மெய்வல்லுநர் போட்டிகளில் 8 புதிய ஆசிய சாதனைகளை வீரர்கள் நிலைநாட்டினர் எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது மாத்திரமல்லாது கமத்தொழில் அமைச்சராக சாதனைமிக்க நெல் அறுவடையை செய்ததுடன் பல் உற்பத்தி உட்பட தன்னாலாவற்றை செய்து காட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான எஸ்.பி.திஸாநாயக்க தற்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

3 comments:

  1. இத்தனை அமைச்சுப்பதவிகளையும் வகித்து இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் செய்த களவையும் துரோகத்தையும் சரியாகச் சொல்வதென்றால் දන්නෝ දනිති. So he is most suitably deserved now is to put him into garbage without furthter delay.

    ReplyDelete
  2. பேசாம பாராளுமன்ற செக்யூரிட்டி ஆக போயிடுங்க ... சாகும் வரை அங்கேயே தங்கிடலாம்

    ReplyDelete

Powered by Blogger.