Header Ads



கொரோனாவிலிருந்து மீண்டு இன்று வீடு, திரும்பவிருந்தவர் மாரடைப்பால் மரணம்


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைகள் மூலம் பூரண குணமடைந்த ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

களணி- ஹெட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் குறித்த நபர் சிசிக்சைப் பெற்று, குணமடைந்து, இன்று வீடுதிரும்பவிருந்த நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான இவர், இந்த மாதம் 1ஆம் திகதி ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாரென்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து பூரண குணமாகி இன்றைய தினம் -10- வீடு திரும்ப தயாரானபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.