Header Ads



வீட்டிலிருந்து வெளியேறும்போது அவதானம் - பொலிஸார் எச்சரிக்கை


( எம்.எப்.எம்.பஸீர்)

முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப் பிடிக்கப்படல் வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் அதனை மீறுவோரைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் இன்று முதல் சுற்றிவலைப்புக்களை முன்னெடுப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வெளியிடப்ப்ட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் இந் நடவடிக்கைகள் மிகக் கண்டிப்பாக பின்பற்றப்படும் எனவும், நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியேறும் போது, முகக் கவசம் மற்றும் சமூக இடை வெளி தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்தார்.

கடந்த 8 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 125 பேரைக் கைது செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று முதல் மிக கண்டிப்புடன் நாடளவைய ரீதியில் குறித்த கைது  நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார். 

No comments

Powered by Blogger.