Header Ads



ஜனாஸாக்கள் கடலுக்குள் போகும் அபாயம் - அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் பயனில்லை


கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. 

தற்காலிய தீர்வாக பிரதேச மக்களால் இடப்பட்ட மண் மூடைகளும் கடல் அலைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் சேதமாகிய நிலையில் உள்ளன.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் பலரும் நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தும் இதுவரையிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். 

கரையோரம் பேணல் திணைக்கள உயரதிகாரிகள், இது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்க ஆரம்ப கட்டத்தை முன்னெடுத்தும் அது இன்னும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

மேற்படி மதில் இடிந்து விழுந்தால், முஸ்லிம் ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகும் நிலை உருவாகுமெனவும் தமது நிலைய உணர்ந்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

ரீ.கே.றஹ்மத்துல்லா, நூருல் ஹுதா உமர்


1 comment:

  1. அரசியல்வாதிகள் வாதத்துக்கு முந்தி மண் மூட்டைகளை அடுக்கி முடிச்சிட்டம்.
    இல்லாட்டி மண்மூட்டைக்கு யார்ர பெயர வைக்கிற என்ட சன்டையில அதுவும் நடந்து இருக்காது.
    அதுல இது மொய்க்கிற மாதிரி வந்தானுகள் பிறகு ஒரு சதத்துக்கும் வக்கில்லாம பறந்திட்டானுகள்

    ReplyDelete

Powered by Blogger.