Header Ads



என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - மஹேல



2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற நிலையில் வெற்றி கோப்பையை தான் வைத்திருக்கும் புகைப்படத்தை அணி பயிற்சியாளர் ஜெயவர்தனே வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

மும்பை அணியை திறம்பட அணியாக மாற்றிய முக்கிய பங்கு அணி பயிற்சியாளரான இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவுக்கு உண்டு.

இந்த நிலையில் ஐபிஎல் வெற்றி கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இது எனக்கு சிறப்பானது, என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

1 comment:

  1. Weldone, Sariii conj lanka team yum conj vali nadattungalein...!!!

    ReplyDelete

Powered by Blogger.