ஜனாஸாக்களை ஏனைய சில உயர்ந்த பகுதிகளிலும், நல்லடக்கம் செய்ய பிரதமர் அனுமதி
- A.A. Mohamed Anzir -
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான பச்சைக் கொடி காட்டப்பட்ட நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்ச ஏனைய சில பகுதிகளிலும், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை பிரதமருடன் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இன்று செவ்வாய்கிழமை 10 ஆம் திகதி பிரதமரிடமிருந்து இந்த உத்தரவு சுகாதார அமைச்சுருக்கு சென்றுள்ளது.
நாளை புதன்கிழமை கூடவுள்ள சுகாதார அமைச்சின் தொழிற்நுட்பக் குழு, இதுதொடர்பில் அவதானம் செலுத்துமெனவும், அவசிப்படுமிடத்து அடையாளம் காணப்பட்டுள்ள உயர்ந்த பகுதிகளில், கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பகுதிகள், வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படுமெனவும் நம்பகரமான வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின
மேன்மை தங்கிய கௌரவ பிரதமர் அவர்கள் எப்போதும் குறிப்பாக வட மாகாண முஸ்லீம்களுக்கு உதவும் முகமாக எமது அரசியல் தலைமையை சுதந்திரமாக இயங்க விட்டார்.அதன் பலனை நாங்கள் அனுபவித்தோம் .சகோதர சமூகங்களுக்கும் சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது.2015இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நன்றி கெட்டதனமாய் நடந்ததின் பலனை யாவரும் அறிவர் .இருந்தும் நாங்கள் இம்முறை நடந்த பாராளுமன்றம் தேர்தலில் மொட்டுக்கு வாக்களித்து எமது நன்றிக் கடனை தீர்த்துக கொண்டோம் .அதன் விளைவே அல்ஹாஜ் காதர் மஸ்தான் Mp என்பதை அறியத்தருகின்றோம் .
ReplyDeleteHasbunallahu vani'mal vakeel
ReplyDeleteஇந்த விடயம் இத்தோடு முடிவடைந்தமைக்கு நாம் முதலில் அல்லாஹ்வுக்கும் அதன் பின்னர் எமது பிரதமர் மஹிந்த அவரகளுக்கும் இவ்விடயத்தில் தீவிரமாக செயற்பட்ட உலமாக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தை ஒரு குழு அல்லது உலமாக்கள் பார்த்துக் கொள்ளட்டும். மீணடும் மீ{ண்டும் கிளர வேண்டாம்.
ReplyDeleteAllhmthu leeila
ReplyDelete