Header Ads



ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில், ஜனாதிபதிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை - அலி சப்ரி


(ஆர்.ராம்)

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கொரானா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் சுகாதார தொழில்நுட்பக்குழுவிடத்திலேயே இறுதி முடிவு தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்ளின் ஜனாஸாக்களை நல்லடக்கும் செய்வது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைந்துள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவும் முஸ்லிம்களின் பண்பாட்டு ரீதியான மற்றும் இஸ்லாமிய மத முறைப்படி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கும் இடமளிக்க வேண்டும் என்றும் நாம் தொடர்ச்சியாக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வந்திருந்தோம்.

அதனடிப்படையில் அமைச்சரவையிலும் இந்த விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் ஜனாஸாக்களின் நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் காணப்படுகின்ற முன்னுதாரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயத்தினை கையாள்வதற்காக சுகாதார தொழில்நுட்பக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது. அந்தக்குழுவிடத்திலும் உரிய தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் ஜனாஸாக்களை புதைப்பதன் காரணமாக தொற்றுக்கள் பரவலாம் என்று அச்சம் வெளியிடப்படுகின்றது. அத்துடன் நிலத்தடி நீர் மாசுபற்றியும் கவனம் செலுத்தப்படுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு மதிப்பளித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தீர்வொன்றை நோக்கிய சிந்தனையை சுகாதார தொழில்நுட்ப குழு மேற்கொள்ளுமாக இருந்தால் இத்தனை இழுபறிகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

துரதிர்ஷ்டவசமாக சுகாதார தொழில்நுட்பக்குழுவானது தீர்வுகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கான காரணங்களையே மென்மேலும் அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றன.

தற்போது நிலத்தடி நீர் தொடர்பான கரிசனையை அந்தக்குழு வெளிப்படுத்தியுள்ளது. ஹொலண்ட் போன்ற நாடுகள் கடல் மட்டத்திலிருந்து கனிசமாக கீழேயே இருக்கின்றன. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகின்றார்கள் உள்ளிட்ட முன்மாதிரிகளை கவனத்தில் கொண்டு அக்குழு இறுதி முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்கின்றேன்.

மேலும் இந்த விடயத்தில் ஜனாதிபதியுடன் நான் பலதடவைகள் கலந்துரையாடியுள்ளேன். அவர் பக்கத்தில் எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. 

குறிப்பாக முஸ்லிமக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களுக்கு எதிரானவராக சித்தரிக்கப்படுகின்றார். அது முற்றிலும் தவறானதொரு பார்வையாகும் ஜனாதிபதியின் மீது அரசியல் காரணங்களுக்காகவே குற்றசாட்டுக்களும் பொய்யான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டினை கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

6 comments:

  1. ஆட்சேபனை இல்லை என்பது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.

    அப்படியாயின் ஏன் அப்துல் ராசிக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கொக்கரிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அதை ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவரே மக்களுக்கு தெளிவாக சொல்லலாமே ?. எடுபிடி செல்லகாசுகள் வீணாக எதற்கு ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும், பின்னர் விசாரணை என்று அல்லாட வேண்டும் ??

    இதுவரை ஜனாதிபதி அல்லது பிரதமர் இது தொடர்பில் வாய் திறக்கவே இல்லை; ஆனால் நல்ல முடிவு சொன்னார்கள்... பச்சை கொடி காட்டினார்கள்... இடம் பார்க்கிறார்கள்... என்று எல்லாம் சித்தாள் களின் வாயிலிருந்து மட்டும் தான் வருகிறது, மேஸ்திரிகள் மௌனம் காக்கின்றனர்.

    ReplyDelete
  3. ஜனாஸாக்களை அடக்குவதில் ஜனாதிபதிக்கு ஆட்சேபனை இல்லை. சரி... எரிப்பதற்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தாரா? இல்லையே. அடக்கம் செய்வதற்கும் ஆட்சேபனை இல்லை. எரிப்பதற்கும் ஆட்சேபனை இல்லை. அடக்கம் செய்யலாம் என்று ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்கத் தேவையில்லை. சுகாதார தொழில் நுட்பக் குழுவுக்கு கண் சாடை காட்டினாலே போதும், அடக்க அனுமதி கிடைத்துவிடும்.

    ReplyDelete
  4. Vilayaadungalappa vilayaadungala...Ungalukku mel oruvan periya velayaattukkaaran irukraan Pls dont forget it...!!!

    ReplyDelete
  5. இது ஒரு அரசியல் காய்நகர்த்தலாக இருக்கலாம் நாம் அவதிப்படத்தேவயில்லை முதலில் செய்தியை மட்டும் விடுதல் ஆடுபவர்களெல்லாம் ஆடிமுடிந்ததும் இரவோடிரவாக காரியத்தைச் செய்தல் என்பது ஒரு அரசியல் தந்திரம். மாடறுப்புத்தடையும் அது போன்றதே. பேரினவாதத்திற்கு தீனி போடவேண்டும் போட்டாச்சு. இப்போ கப் சிப். எனது பார்வையில் நீதி அமைச்சர் தைரியமான இதய சக்தி கொண்டவர்.

    ReplyDelete
  6. Hon. Minister of Justice, Mr. Ali Sabry

    It is nice of you to have spoken to the President on this matter several times. NO Doubt that you would have explained ALL the Relevant Facts CLEARLY EXPOSING the RIDICUOUS and BASELESS Decision of the so-called Health Experts Committee.

    In your opinion, the President has NO Objections to the Burial of the bodies of Muslims who die of Covid 19. Obviously, that doesn’t mean much, because, NO Positive action has been taken so far by him to have the Janazas buried based on his opinion, isn’t it? Doesn’t he feel, after All your explanations, the Muslims Have a RIGHT to bury their dead instead of being FORCED to Cremate? Doesn’t he feel that as the President of ALL the citizens of this country, as he said so soon after winning the Presidential Election, last year, he has a duty to protect the rights of the Muslims to bury their dead instead of being FORCED to Cremate? You know all too well that, being an All Powerful President, thanks to 20A, it is a very simple matter for him to do so without having to wait for the so-called Experts Committee’s decision. Surely, he has the Power to over-rule the Experts Committee or even the Cabinet and Parliament. So, why doesn’t he do that? The simple answer is that the RIGHTS of the Muslims are NOT so important to him as the whims and fancies of a section of the Sri Lankan public.

    Secondly, you know several dicta about how Justice must be done and delivered. No need to tell you, as the Minister of Justice, how crucial it is for you to deliver Justice not just to an individual but, in this case, to an Entire Community, of which you are a member. If, Allah Forbid, you are unable to do your duty as Minister of Justice due to UNACCEPTABLE INTERFERENCE, how would you feel about it? Don’t you think that those who succeeded in preventing you from performing your duty once will try again and again to do just that, whatever be the President’s opinion?

    Finally, Mr. Ali Sabry, don’t forget that like every human being, you are answerable to the All Knowing, Perfect Judge in the Aakhirah. No excuses or explanations will work at that time with millions of Muslim citizens of this country pointing their fingers at you with NO one to support you. So, Mr. Ali Sabry, it is up to you to do the Right thing whether it is acceptable to those wielding power or not.







    ReplyDelete

Powered by Blogger.