என்னை வாழ்த்த விரும்புவோர் வீண் செலவுகளையோ, நிகழ்வுகளையோ செய்ய வேண்டாம் - ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் செய்ய வேண்டாம் எனவும், வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியீட்டினார்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி அனுராதபுரத்தில் வைத்து கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படைச் செலவுகளுக்குப் போராடும் எமக்கு வீண் செலவுகளுக்கு பணம் எங்கே!
ReplyDeleteஇதுவரை வாழ்த்தாதவர்கள் தன்னை வாழ்த்தும்படியும் தனக்காக இதுவரை செலவளிக்காதவர்கள் செலவு செய்யும் படி சொல்கிறார்.
ReplyDeleteமக்களுக்கு புரியுது.