Header Ads



ஜனாஸா எரிப்புக்கு எதிராக, ஒவ்வொருவரும் பங்காற்றலாம்


முப்திளே, அப்பாஸிகளே, மக்கிகளே, மதனிகளே, ஷரயிகளே, நளீமிகளே, தப்லீக்களே, ஜமாத்த இஸ்லாமிகளே, தெளகீதுகளே, லெப்பைகளே, முஅத்தின்களே இன்னும் என்ன பெயரில் மார்க்க த்தில் இருப்பவர்களே அரசியல்வாதிகளே

அரசின் சுகாதாரத்துறையின் ஒரு சில இன மதவாத அரசியல்வாதிகள் வைத்தியர்கள் நம் ஜனாசாக்களை எரிப்பதில் வெறி பிடித்து அலைந்து உயிரோடு இருக்கும் இதயங்களை பற்ற வைத்து சந்தோசப்படுகிறார்கள்

நீங்களோ நம் அனைவரினதும் குடும்ப அங்கத்தினர் களோ இறந்தாலும் இது தான் முடிவு

உங்களின் அகந்தை மமதை பிடிவாதம் நாங்க தான் மக்களை வழி நடாத்துகிறோம் எங்களை விட மார்க்க அறிவில் உயர்ந்தவர்கள் இல்லை இன்னும் பல உங்கள் உள்ளங்களில் இருக்கலாம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் பங்காற்றி இருக்கலாம்

இருந்தாலும் ஊடரங்கு எடுத்தவுடன் CTJ என்ற அமைப்பு சுகாதாரத் துறைக்கு எதிராக போராட இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது

நாங்களா நீங்களா என்ற பெருந்தனத்தை கைவிட்டு விட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து இதில் போராட வேண்டும்

இவர்களுடன் சேருவதா? என்ற காழ்ப்புணர்ச்சி வரும் அதை அல்லாஹ்வுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு நீங்களே முன்னின்று அவர்களையும் சேர்த்து செய்யுங்கள் 

வேற்றுமையில் ஒற்றுமை மத நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல இதற்கும் பொருந்தும்

சேர்ந்து போராடுங் கள்

ஒருவரை ஒருவர் காட்டி கூட்டி கொடுத்து பிரிந்து கேவலப்பட்டுக் கொள்ளாதீர்கள்

நீங்கள் மார்க்கத்தை கற்றறிந்தவர்கள்

எங்களுக்கு என்று வந்தால் நாங்கள் ஒன்றாகி விடுவோம் என்பதை இன மத வெறி பிடித்து அலையும் உலகிற்கு காட்டுங்கள்.

- தாரிக் -

5 comments:

  1. சகோதரா ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சனை என்று வருகிறபோது தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து பின்னால் வந்துசேர் என்றழைப்பது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது திட்டமிடல் மசூரா ஆலோசனை என்பதெல்லாம் சுன்னாவல்லவா? கத்துக்குட்டித்தனம் எத்தனை தூரம் எமது சமூகத்துக்கு ஆரோக்கியமானது?

    ReplyDelete
  2. போராட்டம் செய்யலாம் ஆனால் CTJ என்ற பெயரில் வேண்டாமே, பெரும்பான்மை மக்களிடத்தில் CTJ ஒரு கரும்புள்ளி.
    இதனால் முஸ்லிம்கள் மீது இன்னும் இன்னும் வெறுப்பு அதிகமாகுமே தவிர அது குறையப்போவதில்லை.இதனால் அரசியல் வாதிகள் அவர்களின் வாக்கை கூட்டிக் கொள்வார்கள்...
    இந்த விடயம் இப்போது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் மூலம் இலகுவாக சரிசெய்ய முடியும்.. எம் என்னங்களை போராட்டம் இன்றி ஜனாதிபதியின் உள்ளங்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வோம்...

    ReplyDelete
  3. அப்படி என்றால் முஸ்லிம்களின் போராட்டம் என்று ஆரம்பியுங்கள். அனைவரும் பங்கு பற்றுவார்கள். இதில் ஏன் CTJ BTJ என்ற லேபல்களை கொண்டு வருகிறீர்கள்...? ஒவ்வொரு அமைப்புகளும் இப்படி இலாபம் தேடுவதை முதலில் நிறுத்துங்கள்

    ReplyDelete
  4. இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு உள்ளவர்கள் எடுத்து வரும் முயற்சிகளை தயவு செய்து தீவிர சிந்தனை கொண்டு குழப்பி விட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.