ஜனாஸா எரிப்பு - சிங்கள நண்பனுக்கு புரியவைப்பது எப்படி..?
எப்படி அவனின் வாயை மூடலாம்.அவன் புரிகின்ற மனித உரிமைப் பாஷையில் பேசலாம்.
ஒரே ஒரு பதில்தான். ஒரு முஸ்லிமின் ஜனாசாவை எரிப்பது சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது.இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானது. ‘நீதி விரோதய்.’ என்று சிங்களத்தில் சொல்லுங்கள் இனி சத்தம் போட மாட்டான்.
எப்படி ஜனாஸா எரிப்பு சட்டத்திற்கு விரோதமானது?
மெஹெமய். அஹகன்ன புதா என்று ஆரம்பியுங்கள்.
01. இலங்கையின் அரசியல் யாப்புArticle 10 ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமான மதத்தையும்,நம்பிக்கையையும் பின்பற்றும் உரிமை அவனுக்கு உண்டு.
02. இலங்கை அரசியல் யாப்பில் சரத்து 14(1)(e) ஒவ்வொரு மனிதனுக்கும் தத்தமது மார்க்கத்தையும்,நம்பிக்கையையும்,மார்க்க கிரியைகளையும் (observance),செயற்படுத்தும் உரிமையை வழங்குகிறது.
03. இலங்கை அரசியல் யாப்பின் சரத்து சரத்து12(2) எவரும் இனம்,மதம்,மொழி,குலம்,பால்,அரசியல் நிலைப்பாடு,பிறப்பிடம் போன்ற காரணங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்று சொல்கிறது.
04. அடுத்ததாக சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான ஐ. நாவின சர்வதேசப் பிரகடனத்தில் (ICCPR) இலங்கை கைச்சாத்திட்டிருக்கிறது.அத்தோடு இலங்கையில் அது சட்டமாக்கப்பட்டும் உள்ளது.
05. Section 18 of ICCPR, ஒவ்வொருவரின் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அரசினால் மாதுகாகப்பட வேண்டும் என்று சொல்கிறது.
06. மனித உரிமைகள் சபையினால் வெளியிடப்பட்ட பொதுக் கருத்துரை 22 (The Human Rights Committee General Comment 22, paragraph 4) மதச் சுதந்திரத்தை விபரிக்கையில் ‘ மதச் சுதந்திரம் மற்றும் வழிபாட்டின் மீதான நம்பிக்கை என்பது மத நம்பிக்கையை வெளிமதப்படுத்தும் கிரியைகள்,அனுஷ்டானங்களும், அந்த மத நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற அனைத்து வகையான கிரியை,அனுஷ்டான முறைகளையும் உள்ளடக்குகின்றது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (freedom to manifest religion or belief in worship, observance, practice and teaching encompasses a broad range of acts and the concept of worship extends to ritual and ceremonial acts giving direct expression to belief, as well as various practices integral to such acts, including ritual formulae or ceremonial acts).
07. Section 27 of ICCPR: ஒரு நாட்டில் பல்வகையான இன,மத,மொழிகளைப் பேசுபவர்கள் சிறுபான்மையாக வாழும் பொழுது அவர்களது சொந்தக் கலாச்சாரத்தையும்,மொழியையும் பின்பற்றுவதற்கான உரிமை மறுக்கப்படலாகாது என்று குறிப்ப்பிடுகிறது.
08. தேசிய அல்லது இன,மொழி,மார்க்க அடிப்படையிலான சிறுபான்மையினராக வாழும் மக்களின் உரிமை சம்பந்தமான பிரகடனத்தின் (1992 Declaration on the Rights of Persons belonging to National or ethnic,Religious and Linguistic Minorities) சரத்துக்கள் 2;1,4:1,4:2 என்பன சிறுபான்மையினர் தங்கள் கலாச்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமைகள் இருக்கின்றன என்றும் அவை பாதுக்காக்கப்படவேண்டும் என்றும் அரசு அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்கிறது.
எஹெனங் மச்சங்,
முஸ்லிம்கள் தங்கள் ஜனாசாவை புதைப்பது என்பது அவர்களின் மத உரிமை.கலாச்சார உரிமை.அதனை எந்த சந்தர்ப்பத்திலும் பறிக்க முடியாது.ஆகவே அவர்களுடைய உடம்பை எரிப்பது என்பது இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையிலும் சர்வதேச மனித உரிமை நியமனங்களின் அடிப்படையிலும் சட்ட விரோதமானது. நாங்கள் ஒன்றும் இந்த நாட்டில் உதவி கேட்கவில்லை. எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்.
பெஹிதிலித உம்பட..
Raazi Mohamed
very good. This should be explained by the lawyers in each areas where Muslims live.So that they can live with dignity.
ReplyDeleteSri Lanka is a signatory of the UNO declaration ICCPR. According to this article, SL is violating the sections 18 and 27 of the ICCPR. If so, why don't our Muslim politicians reach out the UNO and demand action by them for violating their own charter. Diaspora Muslims have a role to play. They must approach their political and UNO representatives in their respective countries apply pressure in this regard.
ReplyDeleteVery kindly someone can translate this in to sinhala Pls?
ReplyDeleteஎக ரட எக நீதிய, முஸ்லீம் மினிஸ்சுண்ட வென நீதிய தெண்ட பெ. சிங்களயா மோடயா என்பதை எங்கள் முன்னோர்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteThe answer is that one country has the same law for all and no other justice for Muslims alone. Our ancestors correctly understood that Sinhalese are fools.
පිළිතුර නම්, එක් රටකට සැමට එකම නීතියක් ඇති අතර මුස්ලිම්වරුන්ට පමණක් වෙනත් යුක්තියක් නොමැති බවයි. අපේ මුතුන් මිත්තන් නිවැරදිව තේරුම් ගත්තා සිංහල මෝඩයන් කියලා.