ஐரோப்பாவை போன்று வீரியம்மிக்க, கொரோனா இலங்கையில் - ஐ.தே.க
இன்று -01-cவெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் நிதி தொடர்பாக தொடர்ந்து அரசாங்கத்திடமிருந்து தகவல்களை எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
உலக வங்கி போன்ற அமைப்புகளால் நிதி உதவி கிடைத்த போதிலும், இந்த நிதிகள் எதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை முன்வைக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம், பலமுறை அறிக்கை விடுத்திருந்த போதும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் இந்த நெருக்கடியை அரசாங்கம் அணுகிய பொறுப்பற்ற முறையை எடுத்துக்காட்டுகின்றன என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் முதல் அரசாங்கத்தால் புதிய வென்டிலேட்டர்கள் எதுவும் கொள்வனவு செய்யப்படவில்லை என்ற உண்மையை ஒரு வார இதழ் எடுத்துக்காட்டுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 146 படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது, இது தேவையான அளவைக்காட்டிலும் குறைவானது என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
இலங்கையில் தற்போதைய கொரோனா பரவல், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற வீரியம் மிக்க வைரஸுடன் ஒப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் நாடு தழுவிய பூட்டுதல்களை விதித்துள்ளன, பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை அந்த அரசாங்கங்கள் பொது மக்களுக்கு கோடிட்டுக் காட்டுகின்றன.
இதனை போன்று இலங்கையில் புதிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு முன்வைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
கடந்த வார இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தமது தாயை பிரிந்த ஒருமாற்றுத் திறனாளி தற்கொலை செய்து கொண்டார்.
இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அப்பட்டமாக புறக்கணிப்பது மாத்திரமல்லாமல் அரசாங்கத்தின் திட்டமிடல் இன்மையை காட்டுகிறது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொரோனா பற்றி பேசுவதற்கு உமக்கு எந்த அருகதையுமிலலை. மத்திய வங்கியில் அடித்த கொள்ளைப் பணத்தை அரசாங்தத்துக்குத் திருப்பிக் கொடுத்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கொஞ்சமேனும் சமாளிக்கலாம். எங்கே அந்த மத்திய வஙகியின் கொள்ளைப்பணம்?
ReplyDelete