Header Ads



முஸ்லிம் உடல்களை அடக்கம் செய்யவுள்ள உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம், அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை - ஞானசாரர்


கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற உரிமையை தாம் ஏற்றுக் கொள்வதாக ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இன்று  -10 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வாறு அடக்கம் செய்வது தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் அதற்கு ஒழுங்கான நடைமுறை இருப்பதாக அவர் தெரிவித்தார். அது அவர்களுடைய உணர்வுபூர்வமான விடயம் என்று ஞானசார தேரர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்து தெரிவிக்காமல் அரச தரப்பில் இருந்து எவராவது ஒருவர் வந்து சடலங்களை எரிப்பதா புதைப்பதா என்பதை தௌிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

1 comment:

  1. முஸ்லிம்கள் சார்பாக பேசுமாறு இவனிடம் யாரும் கேட்கவில்லை. அவனுடைய கருத்துக்களை அவ்வளவு சீரியஸாக முஸ்லிம்கள் யாரும கேட்க வேண்டிய அவசியமுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.