Header Ads



"அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்" - சந்திரிகா


அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவரின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கும் கமலா ஹரிஸுக்கும் டுவிட்டர் சமூகவலைத்தளப் பதிவின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கும் குமாரதுங்க, அமெரிக்க மக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.

'மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும். ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும் சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டிற்கும் வருகின்ற சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்துநின்று வெற்றிகொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது. 

அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்' என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

2 comments:

  1. உங்கள் ஜனநாயகம் என்னவென்று உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டிருக்கும் முழு முஸ்லீம்களும் பார்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இலங்கையில் அப்பாவி முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் இந்நாள்களிள்,அம்மாடி வாயேதிறக்காம???

    ReplyDelete
  2. நாங்களும் எல்லா பேதமும் மறந்து உம்மை ஜனாதிபதியாக்கினோம் நீரும் பைத்தியம் விளையாடிவிட்டு போனீர் , முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் விபத்துக்கு ஒரு அறிக்கையும் வெளி இடமலே போனீர் ,

    ReplyDelete

Powered by Blogger.