Header Ads



உயிரோடு எரிகிறது இதயங்கள்..!



-கல்ஹின்னை ஹில்மி ஹலீம்தீன்


இன்னுமேன் தாமதம்..?

இன்னுமெத்தனை ஜனாஸாக்களை

எரியூட்ட எத்தனிப்பு?

ஏனிந்த எக்காளமும் ஏமாற்றமும்?


எரிப்பது ஒன்றும்

இறந்தவர்களை மட்டுமல்ல;

உயிரோடிருக்கும் 

ஈமானிய இதயங்களையும் தான்!

உயிரோடு எரிகிறது இதயங்கள்!


மனிதாபிமானத்தை மறைத்திட்ட மதவாதம்,

இஸ்லாமியனின் இறுதிச் சடங்கை

இடையூறு செய்கிறதே!

உயிரோடு எரிகிறது இதயங்கள்!


மண்ணில் பிறந்த மாந்தர்க்கு

மரணம் என்றும் நிச்சயமே!

௧லங்கும் எம் மனங்களுக் கெப்போது

துலங்குமிந்த வலுக்கட்டாயத்தின் மர்மம்?

உயிரோடு எரிகிறது இதயங்கள்!

2 comments:

  1. சின்ன சின்ன ஆசை
    சிறகொடிந்த ஆசை
    முத்து முத்து ஆசை
    மூழ்கிப்போன ஆசை

    முகத்திரை கழட்டி
    முகம் பார்க்க ஆசை
    கைகளை விரித்து
    கை குழுக்க ஆசை

    அக்கம் பக்கம் சென்று
    அளவளாவ ஆசை
    வீட்டில் முடங்காமல்
    வீதிக்கு செல்ல ஆசை

    கடலோரம் சென்று
    காற்று வாங்க ஆசை
    சுட்டெரிக்கும் வெயிலில்
    சுகம் காண ஆசை

    ஊர் விட்டு ஊர் சென்று
    உலாவி வர ஆசை
    ஒடும் பஸ்ஸை
    ஒடிப்பிடிக்க ஆசை

    தனிமையும் தனித்துவமும்
    தடை தாண்ட ஆசை
    வறுமையும் வெறுமையும்
    வென்றிட ஆசை

    கபனுக்குள் சென்று
    கப்று செல்ல ஆசை
    நெருப்பு தீண்டாமல்
    புதைந்து விட ஆசை.

    Nuzrath Mubarak

    ReplyDelete

Powered by Blogger.