அக்குறணை பள்ளிவாசல்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன
- மொஹொமட் ஆஸிக் -
அக்குறணை நிர்லெலை பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்றும் அனைத்து பொது வைபவங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ன என்றும் அக்குறணை பிரதேச செயலாளர் இந்திக்க குமாரி அபேசிங்க தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், உலமா சபையுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், அக்குறணை பிரதேசத்தில் கொரோனா வைரஸ்; பரவுவதை தடுப்பதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பள்ளிகள் மூடப்பட்டால், இனி அக்குரணைக்கு கொரோனா அதன் தலையையோ வாளையோ காட்டாது. மிகச்சிறந்த முடிவு!
ReplyDelete