Header Ads



கொழும்புக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு


கொழும்பு நகரத்திற்கு குறைந்த அளவிலானோரே வருகைதர முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருவதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்றைய தினம் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா நோயாளியாகுவதனை தவிர்க்க முடியாத விடயமாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் ஆபத்தான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பகுதிகளில் கொரோனா நோயாளிகள் இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது கடினம். இதனால் கொழும்பு வருவதனை தவிர்க்கவும். இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.