Header Ads



கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள இஸ்லாமிய கணவனும் மனைவியும்


-எஸ்.ஹமீத்-

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் கொரோனா உயிர்கொல்லி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள ஜேர்மனியின்  டாக்டர் ஒய்குர் சஹினும் அவரது மனைவியான ஒஸ்லம் துரஸியும் துருக்கியைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸ்லிம்களாகும். 

கொரோனாவிலிருந்து 90% பாதுகாப்பளிக்குமென்ற உத்தரவாதத்துடன் நேற்றைய தினம் முழு உலகத்தையும் மகிழ்ச்சிக்குள் மூழ்கடித்திருக்கும் தடுப்பூசி பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பின் பின்னர் உலக பங்குச்சந்தை வெகுவாக உயர்ந்துள்ளது. அமெரிக்க,ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் அவசர ஊடக மாநாடுகளை நடாத்தினர். உலகின் பல நாடுகள் மில்லியன் கணக்கில் தடுப்பு மருந்துக்கு ஓடர்களைப் பதிவு செய்தன. இன்னும் மூன்று, நான்கு வாரங்களுக்குள் தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றத் தயாராகுமாறு பிரித்தானிய அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டது. 

உலக மக்களுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் வழங்கியிருக்கும் தடுப்பூசி பற்றிய அறிவித்தலின் பிரகாரம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் இத்தடுப்பூசி  விநியோகிக்கப்பட்டுவிடுமென்ற எதிர்பார்ப்புமுள்ளது. 

டாக்டர் சஹினும் அவரது மனைவியும் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருக்கும் BioNTech இன் இணை நிறுவுனர்கள் என்பதும் இந்நிறுவனம் Pfizer கம்பனியுடன் இணைந்தே தடுப்பூசியை உற்பத்தி செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ஜேர்மனியின் முதல் நூறு செல்வந்தர்களில் டாக்டர் சஹினும் ஒருவர். இப்போதைய கண்டுபிடிப்பின் பின்னர் முதல் பத்துக்குள் வரலாம். அவருக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கலாம். 

ஆனாலும் அவர் தனது வீட்டிலிருந்து    மருத்துவமனைக்கும் ஆய்வுகூடத்திற்கும் சென்றுவரும் அந்தப் பழைய சைக்கிளை மட்டும் கைவிடமாட்டாரென்றே தெரிகிறது. 

4 comments:

Powered by Blogger.