பேஸ்புக் மூலமாக மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் கண்டுபிடிப்பு
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய பலர், தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலிருந்து படங்களைப் பதிவு செய்துள்ளனா் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாங்கள் பொலிஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டோம் எனவும் அவர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலிருந்து 29 ஆம், 30 ஆம் திகதிகளில் வந்த ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய எவரும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணம், மிகவும் ஆபத்தான பகுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்வதால், அந்தப் பகுதிகளுக்கு ஆபத்தான நிலை உருவாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment