Header Ads



முஸ்லிம் ஜனாஸா எரிப்பு - அன்வர் மனதுங்கவின் அபிப்பிராயம்


நான் இதனை தமிழ் மொழியில்  எழுதுவிக்கக் காரணம், சகோதர இனத்தவர்களிடையே இப்பிரச்சினை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இது வேறிடத்தில் போய் முடியுமென்பதால்.

முஸ்லிம் ஜனாஸாக்களைப் புதைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சரவைக் குழு நேற்று ஒன்றுகூடியது. அங்கு ஈரலிப்பற்ற காய்ந்த நிலமொன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இது திடீர் முடிவெடுக்கக் கூடிய விவகாரமல்ல. இது தொடர்பாக வருங்காலங்களிலும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. 

நாளை அல்லது நாளை மறுநாள் கெபினட் குழுவிலும் இது தொடர்பாக பேசப்படவுள்ளது. இங்கு நாம் மகிழ்ச்சியுற வேண்டிய விடயம் என்னவென்றால், இதற்கு ஒரேயொரு  சகோதர இன அமைச்சர் மாத்திரமே மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் ஒரு முக்கியஸ்தர் அல்ல.

இதனிடையே எமது முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிட்ட சில குழுக்கள் பாதையில் ஆர்ப்பாட்டம், ஒன்லைனில் ஆர்ப்பாட்டம் என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களது செயற்பாடுகளை சகோதர இனத்தவர்கள் மீடியாக்களில் பார்த்தால் அவர்களுக்குள் இருக்கும் சில தீவிரவாதிகள் இதனை பூதாகரமான பிரச்சினையாக ஆக்கிட வாய்ப்புண்டு.

அதனால் உம் அனைவரிடமும் நான் கனிவாக வேண்டுவது, பொறுமையாக நமது கோரிக்கையை வெற்றிபெறச் செய்யும் வரை எதுவித மனுவழங்கலோ, ஆர்ப்பாட்டமோ மேற்கொள்ள வேண்டாம் என்பதே.

-அன்வர் மனதுங்க-

10 comments:

  1. அல்லாஹுக்கு பயப்படாமல் அவனுடைய படைப்பினங்களுக்கு பயப்பட்டால்
    இதுதான் நடக்கும்

    ReplyDelete
  2. We are NOT asking for Kingship or Palace.. but simply the right to breath, to bury the death... But some of us fear to the level that if we raise the voice they will hit more.

    This the worst and shameful status of the feared of human on this earth and nothing to lose any more.

    May Allah guide us to be wise and also not be so coward human earth.

    ReplyDelete
  3. அன்வர் மனதுங்க அவரகளின் ஆலோசனை மெச்சப்படத்தக்கது.

    ReplyDelete
  4. JM AVOIDING SOME COMMENTS.

    ReplyDelete
  5. Portthamaaana pathiuwu.....welcome

    ReplyDelete
  6. We must do something then only world know our situation .

    ReplyDelete
  7. உங்கள் உரிமைகளை நேருக்கு நேர் உரிமையுடன் கேட்டவேண்டும், போராடவேண்டும். அம்மா...தாயே... .... தாருங்கள் என கெஞ்சக்கூடாது.

    பணத்துக்காக... கட்சி மாறி வாக்களித்த முஸ்லிம் தலைவர்களை இதற்கு ஏன் போராடவில்லை

    ReplyDelete
  8. ஆபத்து : இஸ்லாத்தை பேசினால், பின்பற்ற முயன்றால் சஹ்ரான் பட்டமும், பயங்கரவாதி பட்டமும் : வழங்குவது யார் தெரியுமா? அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே, இதனை சற்று ஆழ்ந்து வாசியுங்கள், சிந்தித்து நல்ல முடிவு எடுங்கள். இல்லாவிட்டால் இனிமேல் இலங்கையில் இஸ்லாத்தை பின்பற்றவே முடியாமல் போகலாம், இஸ்லாம் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத வேறு ஒரு மதத்தை பின்பற்ற வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். முன்னாள் MP பாலித தெவரப்பெரும அவர்கள் போட்டுள்ள ஒரு படம் தற்பொழுது சர்ச்சையாக மாறி உள்ளது. அதிலே சில முஸ்லிம் பெண்களுடன் அவர் அவர்களின் உடலின் சில பகுதிகளை தொட்ட வண்ணம் இருக்கின்றார், அந்தப் பெண்களும் முறையான ஹிஜாபை பேணாமல் இருக்கின்றார்கள், இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அப்படி இருக்க நாட்டின் சட்டம் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை, அப்படி புகைப்படம் எடுக்கவோ, அதனை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவோ உரியவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. அதே போலவே (போயா அல்லாத நாட்களில்) சாராயம் வாங்கவோ, அதனை குடிக்கவோ, பன்றி இறைச்சியை வாங்கவோ, அதனை சமைத்து சாப்பிடவோ இந்த நாட்டில் சட்டப்படி எந்த தடையும் இல்லை. நாட்டில் தடை இல்லை என்பதற்காக சாராயத்தையும், பன்றி இறைச்சியையும், மஹ்ரமி இல்லாத அந்நிய ஆண்களுடன் குலாவுவதையும், அவ்ரத்தை திறந்துகொண்டு இருப்பதையும் இஸ்லாமாக மாற்ற முடியுமா? குறித்த பெண்கள் எவ்வாறு போட்டோ எடுத்தார்கள் என்பதோ, அதனை பாலித தனது உத்தியோகபூர்வ பேஜில் வெளியிட்டார் என்பதோ மிக முக்கியம் அல்ல. ஆனால் இஸ்லாத்தின் படி அதனை சரி என்று சொல்லி, அதனை புகழ்ந்து, அதனை மற்றைய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக மாற்ற முயல்வதை சாதாரண செயல் என்று சும்மா பார்த்துக்கொண்டு வாய் மூடி இருக்க முடியாது, இஸ்லாத்தை மாற்றவோ, இஸ்லாத்தின் அவ்ரத், ஹிஜாப், மஹ்ரமி, அஜ்னபி சட்டங்களை மாற்றவோ யாருக்கும் முடியாது. இங்கே படத்தில் இருப்பவர் பெயர் அன்வர் மானதுங்க. இவர் பெளத்தம், கிறிஸ்தவம் என்று முன்னர் இரண்டு மதங்களுக்கு மதமாறிவிட்டு, பின்னர் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர். இஸ்லாத்தை முறையாக படித்தவர் அல்ல, எனினும் பேச்சு திறமையும், பப்ளிசிட்டி திறமையும், ஊடக

    ReplyDelete
  9. World knows everything.you keep calm please

    ReplyDelete

Powered by Blogger.