Header Ads



உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், இடம்பிடித்த இளம் இஸ்லாமிய விஞ்ஞானி ஷகீல்


உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் படியலில் இடம்பிடித்த இளம் இஸ்லாமிய விஞ்ஞானி ஷகீல் அஹ்மத -அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

காரணம் என்ன தெரியுமா?

இதோ நீங்களே படியுங்கள்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் உலகத்திலேயே சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தது. அதில் 2300 பேர் இந்தியர்கள். அவர்களில் பலரும் ஐஐடி, ஐஐஎஸ்சி

போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள்.

காஷ்மீரைச் சேர்ந்த ஷகீல் அஹமதும் 

பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். டெல்லி ஐஐடியில் ஆராய்ச்சி மேற்ப்டிப்பு மாணவராக இருந்தவர். 31 வயது நிரம்பிய ஷகீல் உலகின் பல நிறுவனங்களிலிருந்து வந்த அழைப்புகளை நிராகரித்து விட்டு இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் பூன்ச் மாவட்டத்திலுள்ள அரசுக் கல்லூரியில் வேதியியல் போதிக்கும் துணைப் பேராசிரியாரகப் பணியாற்றுகிறார். 

இதற்கு அவர் சொல்லும் காரணம்: “காஷ்மீர் மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்பு வந்தவுடனேயெ ஏற்றுக் கொண்டேன். நல்ல கல்வி பெறுவதற்காக நடக்கும் போராட்டத்தை நான் அறிவேன். எனக்கு ஒரு வயது நிரம்பும் முன்னரே என் தந்தை இறந்து விட்டார்.  அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப்புகளை வைத்துத்தான் படித்தேன். என் சமுதாயத்திற்கே என் கல்வி பயன்பட வேண்டும் என்பதால் ஆராய்ச்சி மேற்படிப்பு முடிந்ததும் ஊருக்கே திரும்பி விட்டேன். குடும்பத்தில் நான் முதல் தலைமுறை பட்டதாரி.”

இவர் பிஎச்டி பட்டம் பெற்றது ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில்!

5 comments:

  1. விஞ்ஞானி அஹ்மத் ஷகீலுக்கு எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.அவருடைய பணி தொடரவும், கல்வி வாய்ப்பற்ற கஷ்மீர் மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்தி அவருடைய எதிர்காலத்தையும் தியாகம் செய்த அவருக்கு அல்லாஹ் அவருடைய பணியை நிறைவேற்ற போதிய பாதுகாப்பையும், பரக்கத்தான வாழ்க்கையையும் அருளுவானாக.

    ReplyDelete
  2. Aameen, May Allah give him protection and bless his life...

    ReplyDelete
  3. Ya Allah! bolster him and gtant success for all his humanitarian efforts! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.