Header Ads



இணக்கப்பாடின்றி முடிந்த, ஜனாஸா எரிப்பு விவகாரப் பேச்சு

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக, இன்று சனிக்கிழமை, 7 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.


சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தலைமையில், நடைபெற்ற இப்பேச்சில், முஸ்லிம்களின் தரப்பிலும் சிலர் பங்கேற்றனர்.

எனினும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பில், ஆர்வம் கொண்ட சுகாதார தரப்பு சார்பிலான சிலர், தொடர்ந்து இனவாத சாயம் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்துள்ளனர்.

முஸ்லிம்கள் தரப்பில் பங்கேற்றவர்களோ, கொரோனா தொற்றினால் மரணித்த உடல்களை அடக்குவதால்,  எவ்வித பாதிப்பும் இல்லையென ஆதாரங்களை சமர்ப்பித்து, அழகான முறையில் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் இறுதி நிலைப்பாடோ அல்லது சாதகமான நிலைப்பாடுகளோ எட்டப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் இதுபற்றி தொடந்து பேசுவது என, இணக்கம் காணப்பட்டதாக இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின.

1 comment:

  1. Thirst of Racism....

    Let all of us raise our hand toward the TRUE ONE GOD of them and us and ask him to help in this course to burial of muslim's covid bodies and make our life easy in our own land.

    Yaa Allah, teach them "the racist authority" a good lesson to understand the human rights and humanity.

    IF they keep adamant in this course and preventing our religious freedom.. punish them more suitable way , that they should taste the heat of the fire in both worlds.

    ReplyDelete

Powered by Blogger.