தேவையற்ற இறக்குமதியைக் குறைத்து, தேவையாற்ற வெளிநாட்டுக் கடன்களையும் நிறுத்திவைக்க முடிவு
2020ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடனை, இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று (12) தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை, எதிர்க்கட்சி விதைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய நிர்வாகம், நாட்டின் கடனை நன்கு நிர்வகித்து வருகின்றது என்றும் 2020ஆம் ஆண்டு முதல், 4200 மில்லியன் அமெரிக்க டொலர்களை, வெளிநாட்டுக் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், 2020ஆம் ஆண்டுக்கான கடன் திருப்பிச் செலுத்தும் அளவு பூர்த்தியடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பயனுள்ள பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியதன் மூலமே, இது சாத்தியமானது என்றும் அரசாங்கம் தேவையற்ற இறக்குமதியைக் குறைத்துள்ளதுடன், தேவையாற்ற வெளிநாட்டுக் கடன்களையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment