Header Ads



வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை, அடக்கம் செய்வது கத்தோலிக்க மக்களின் உரிமை


கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்வது கத்தோலிக்க மக்களின் உரிமை எனவும் கத்தோலிக்கர்களும் ஆரம்பத்தில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கத்தோலிக்க பிரதிஷ்டை அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை உலகில் எந்த நாடும் செய்யாத விதத்தில் தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் மக்களுக்கு முன்னர் கத்தோலிக்க மக்களே போராடினர்.

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அடிப்படைவாத நிலைப்பாடுகளை முன்னெடுத்த நபர்கள் மற்றும் ஊடகங்கள் இறுதியில் மக்கி போகாத உடல் மற்றும் மரணத்தை வென்று உயிர்த்த யேசு கிறிஸ்துவின் சரீரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பது கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை. கொரோனா தொற்றால் உயிரிழந்த மில்லியன் கணக்கான நபர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் அறிவியல் ரீதியான சாட்சியங்கள் இன்றி முன்னெடுக்கப்படும் கதைகள் மீது நம்பிக்கை வைப்பது மூட நம்பிக்கையாளர்களின் செயலே அன்றி புத்திசாலிகளான எங்களது செயல் அல்ல.

தமது சமய வழிமுறைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள சிலர், ஏனைய மதங்களின் நம்பிக்கை சிதைக்க முயற்சித்து வருவதுடன் தகனம் செய்வது கட்டாயம் என கூறி வருகின்றனர் எனவும் கத்தோலிக்க பிரதிஷ்டை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. Sri lankan health officials will get Guinnes record for their invention that soil will get corona from dead bodies. Funny guys.crazy

    ReplyDelete
  2. யார் முந்தி யார் பிந்தி என்று பிரிவினைவாதம் பேசுவதற்கு இந்த விடயம் ஒன்றும் ஓட்டப்பந்தயம் இல்லை. அவரவர் மதம் சார்ந்த தனிப்பட்ட உணர்வும் உரிமையையும். இதனை ஆரம்பத்தில் அரசியல் ஆக்கியவர்கள் இப்போது பிதுங்குகிறார்கள். இப்போதும் அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு மேலிடம் கல்லிலே xxxx பூனை போல தொடரவும் முடியாமால் நிறுத்தவும் முடியாமல் திணறுவதை பார்த்து தினம் தினம் மாற்றி மாற்றி உளறுகிறார்கள் . ஒற்றுமையாக ஒரே குரலில் உரக்கவோ மெதுவாகவோ சொல்லி இந்த கொடூரமான அநியாயத்தை நிறுத்த முன்வாருங்கள் .

    ReplyDelete

Powered by Blogger.