Header Ads



மேல் மாகாண ஊரடங்கு நவம்பர் 9 வரை நீடிப்பு: சவேந்திர சில்வா அறிவிப்பு



மேல் மாகாணம் முழுவதும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.


தொலைக்காட்சி அலைவரிசைகளில் தோன்றி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.


நாளை காலை 5.00 மணிக்கு ஊரடங்கை நீக்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை மேலும் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேல் மாகாணத்தை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகர் மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு ஆகியவற்றிற்கும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.