நீதிபதி நவாஸ் உள்ளிட்ட 6 பேர், உயர்நீதிமன்றத்துக்கு ஜனாதிபதியினால் பரிந்துரை
உயர்நீதிமன்றத்துக்கு புதிய ஆறு நீதிபதிகளை நியமிக்குமாறு, நாடாளுமன்றப் பேரவைக்கு, ஜனாதிபதி கோட்டாபயா ராஜபக்ஷ, பரிந்துரை அளித்துள்ளார்.
இதன் பிரகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் எச்.எம்.டி.ஏ.நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணரட்ண, குமுதினி விக்கிரமசிங்க, ஜானக் டீ சில்வா, அச்சலா வென்னப்புவி, மஹிந்த சமயவர்த்தன ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் சிரேஷ்ட நீதிபதிகள் வரிசையில் பிரதம நீதியரசரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி இந்தத் தேர்வை மேற்கொண்டுள்ளார்.
இந்த மூத்த நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு நியமிப்பதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதித்துறையில் சேவையில் ஈடுபட்டு வந்த மூத்த நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment