Header Ads



மெதமுலனவில் அமரர் ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரித் பாராயணம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வீரகெடிய, மெதமுலன இல்லத்தில் பிரித் உபதேசமும் இன்று (07) முற்பகல் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வும் இடம்பெற்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஜனாதிபதியின் பாரியார் . அயோமா ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (2020.11.06) பிற்பகல் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ராஜபக்ஷ ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, திருமதி. சந்திரா ராஜபக்ஷ, திரு.பசில் ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மெதமுலனவில் அமைந்துள்ள அமரர் திரு.டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் திருமதி. தந்தினா சமரசிங்க திசாநாயக்க ராஜபக்ஷ ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இடம்பெற்ற தீப பூஜையிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

பிரித் உபதேசத்தில் ஹபுகம்பொத புரான மஹா விகாராதிபதி மித்தெனியே இந்திரரதன தேரர், பல்லே முலன கிருவாசேய விகாராதிபதி சபுகஸ் யாயே தம்மரதன தேரர், மற்றும் ஹபுகம்பொத அதுல தக்ஷினாராம விகாராதிபதி வகமுல்லே சந்திரவிமல தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர். 

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு, குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாத்திரம் இந்த வழிபாடுகள் இடம்பெற்றன.

No comments

Powered by Blogger.