Header Ads



தரம் 5 மாணவன் M.N Zakir Ahmed இலங்கைக்காக தங்கம் வென்று அசத்தல்..


கடந்த  ஒக்டோபர் மாதம் 27ம் திகதி முதல் நவம்பர் 01 வரை நடை பெற்ற  IFMA Virtual Muaythai World  Championship 2020 முய்தாய்  சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகள் மிகச் சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிக்காட்டி 3 தங்கம், 10 வெள்ளி மற்றும் 6 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் நிலவும் COIVID-19 நிலைமை காரணமாக இம்முறை இப்போட்டி ஒன்லைன் (onilie) முறையில் நடைபெற்றது,  தாய்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் IFMA - International Muaythai Federation of Armature உத்தியோகபூர்வ நிறுவனமானது இப்போட்டியை நடாத்தியது.

உலகின் பல பாகங்களில் இருந்தும் 850 க்கும்  மேற்பட்ட போட்டியாளர்கள்  80க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதத்துவபடுத்தி இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்,

போட்டிகள் Shadow Box, Aero Fit, Max Fit, மற்றும் Wai Kru பிரிவுகளின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ,மாவனல்லையை  சேர்ந்த M.N Zakir Ahmed (Gr 5 Zahira Collge Mawanella / IMA Sri Lanka)  Max  Fit Under 11 பிரிவில் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. பதக்கங்களின் விபரம் கீழே

இவர் Olympic Committee இனால் நடாத்தப்படும் United Through Sports போட்டியில் இலங்கையை  சார்பாக IFMA

ஊடாக கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாவனல்லை Zahira தேசிய பாடசாலை தரம் 6A  மாணவன் Suhail Faseen - Max  Fit Under 12 பிரிவில் வெள்ளி பதக்கம்  வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இப்போட்டியாளர்களை பல சவால்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில்  மடவளையை சேர்ந்த Master Mr. M.H.M Fahid (President and Chief Instructor - IMA Sri Lanka) அவர்களின் சிறந்த வழிகாட்டல், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பயிற்றுவிப்பின் மூலம் இவ்வெற்றியை அடைய வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்.

Hanguranketha Pallebowala College - Hanguranketha Muaythai Club வீரர்களை அப்பாடசாலை ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான Mr. Jamitha Gayan Bandara அவர்கள் பயிற்றுவித்திருந்தார்.

இப்போட்டியில் வெற்றியீட்டி இலங்கை திருநாட்டுக்கு பெருமை சேர்த்த இவ்விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது பயிற்றுவிப்பாளருக்கும்  எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

செய்தி : Mohamed Nuzrath (IMA SriLanka )



1 comment:

  1. தாய்மண்ணுக்கு பெருமை சேர்த்த சகோதரர்கள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.