நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் 21 மாணவிகள் சித்தி
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் நிந்தவூர் கமு/கமு/ அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 21 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளார்கள்.
2020ஆம்
ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு நிந்தவூர் கமு/கமு/ அல் -மஸ்ஹர்
பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த 91மாணவிகள் தோற்றினர். இவர்களில் 21
பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்தோடு 90 மாணவிகள் சித்தி
பெற்றுள்ளனர். இதன்அடிப்படையில் 98.90 சித்தி வீதத்தினையும் பெற்று
நிந்தவூர் கமு/கமு/ அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றுமொரு
வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
மேற்படி பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நிஸாமுதீன் தரம் 05 புலமைப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
எமது பாடசாலை தொடர்ச்சியாக தேசிய பரீட்சைகளில் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. பாடசாலையின் ஆசிரியர்களின் தியாக அடிப்படையிலான சேவையே இதற்கு முதற் காரணமாகும். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும் எமது பாடசாலை சாதனை படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
இச்சாதனையை பாடசாலை அடைந்து கொள்வதற்கு காரணமாக இருந்த மாணவிகளை பாராட்டுகின்றேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இம்மாணவிகளுக்கு சிறந்த முறையில் கற்பித்தலை மேற்கொண்டு வழிகாட்டிய ஆசிரியர்களான திருமதி ஏ.யூ.எம்.பளீல், ஐ.எல்.ஏ.ரஹ்மான், எப்.எம்.சியாஸி ஆகியோர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பாடசாலையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், சாதனைகளுக்கும் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அவர்களுக்கும், கல்முனை வலயக் கல்விப் பணிபாளருக்கும் இத்தருணத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு ஆரம்பப் பிரிவு பொறுப்பதிபர் முஹமட் மூபீத், பகுதி தலைவருக்கும், ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர் ஆலோசகர், முன்னாள் அதிபர், தரம் ஒன்றிலிருந்து கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர்களுக்கம் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதே வேளை, வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவிகள் எந்த வகையிலும் தங்களை குறை;து மதிப்பிட வேண்டியதில்லை. அவர்களும் தங்களின் திறமையை காட்டியுள்ளார்கள். எமது பாடசாலையில் 91 மாணவிகளில் 90 மாணவிகள் சித்தியடைந்துள்ளமையும் சாதனையாகவே இருக்கின்றது. அந்த மாணவிகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளில் குறைகாணாது இருப்பதோடு, அவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்கு துணையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவிகள்:
நல்ல பதிவு. வெட்டுப் புள்ளிக்குமேல் "தகைமை/தகுதி" பெற்றவர்கள் போன்ற சொற்பிரயோகங்கள் இன்னும் சிறப்பாகும். வாழ்த்துக்கள்!!!
ReplyDelete