கொழும்பு மாநகரத்தை குறைந்தது 3 வாரத்திற்கு மூட வேண்டும் - மேயர் ரோஷி
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு நகர சபை அதிகார பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
´கொவிட்டுடன் வாழ்வது என்பது கொவிட் இரண்டாம் அலையுடன் வாழ்வதென்று பொருட்படாது. கொவிட்டுடன் வாழ வேண்டும் என்றால் இரண்டாவது அலையை கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும். கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நகரத்தை கடும் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவந்து எவருக்கும் நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் வௌியேராத வகையில் கடும் நிர்வாகத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த வில்லை என்றால் ஒரு பெரிய பேரழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும். நேற்று மட்டக்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சிலர் வீடுகளில் இருந்து வௌியேறி தொழில் செய்யும் இடங்களுக்கு செல்வதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. மரணங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைவடைவதில்லை. கொழும்பு நகர சபை எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை காப்பாற்ற முடியுமா என்பதும் இன்று ஒரு பிரச்சினையாகியுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எவ்வளவு கூறினாலும், குடிசைவாசிகளுக்கு அவ்வாறு செய்வது அவசியமற்றது. அவ்வாறு செய்வதாயின் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையான நிர்வாகத்தின் கீழ் செயற்பட வேண்டும். 14 அல்லது 21 நாட்கள் முடக்கி இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆபத்தான சூழலை எதிர்க்கொள்ள வேண்டியேற்படும்´ என்றார்.
the locking down measure with existing shelter facilities probably increase the hazards instead of controlling. so an alternative shelter system should be considered in densely populated areas in the CMC.
ReplyDeleteBut, இப்போதே வாழ்வாதாரம் பாதிப்படைந்து விட்டது, இன்னும் 3 கிழமைகள் என்றால் கொழும்பில் வயோதிபர்கள் மரணம் பட்டினியால் தான் அதிகரிக்கும்..... என்ன ஒரு கொடுமை கொழும்பு ம்க்ளுக்கு வ
ReplyDeleteகொழும்பு மக்கள் நாட்டுக்கு என்ன அநியாயம் செய்தார்கள்? சிறு பிள்ளை தொடக்கம் வயோதிபர் வரை பட்டனி கிடந்து சாகுவது தான் உங்களது ஆசையா? எத்தை நாள் முடக்கம் இன்னும் முடக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? எத்தனை கூலித் தொழிலாளிகள் கொழும்பில்? வெறியைக் கொட்டி முடிக்க வார்த்தைகளே இல்லை
ReplyDelete