போலிச் செய்திகளை வெளியிட்ட 2 வெளிநாட்டு நபர்களைக் கைதுசெய்ய இன்ரபோல் உதவி
கொவிட் -19 காரணமாக இலங்கையின் வீதிகளில் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி முகநூல், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டோகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
நாட்டில் கொவிட்-19 தொற்றை சுகாதார அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததால் அதிகமானோர் வீதிகளில் இறந்து விட்டதாகவும் அவற்றில் கூறப்பட்டது.
ஒரு போலிச் செய்தி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணையை ஆரம்பித்தனர். அதன்படி முன்னதாக இரு உள்ளூர் சந்தேகநபர்கள் கடுகண்ணாவ மற்றும் ஹந்தானையில் கைது செய்யப்பட்டனர்.
கணினி நிபுணர்களின் கூற்றுப்படி, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து இரு நபர்கள் போலிச் செய்திகள் அடங்கிய வெவ்வேறு ஆக்கங்களை வெளியிட்டுள்ளனர். எனவே அவர்களைக் கண்டுபிடிக்க சிஐடி, இன்ரபோல் உதவியை நாடவுள்ளது என்றார்.
சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்து சமூக ஊடக பாவனையாளர்கள் செய்தி வெளியிடவோ அனுப்பவோ கூடாது என்றும் இது போன்ற பதிவுகள் சரியானவையா என்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நீங்கள் குற்றவியல் வழக்கின் சந்தேக நபராகக் கூடும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண வலியுறுத்தினார்.
கொரோனாவினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாவிலிருந்து நிலத்தடி நீருடன் வைரஸ் சென்றடையும் என்ற போலிச் செய்தியை வெளியிட்ட நபரையும் கைதுசெய்ய வேண்டும்.
ReplyDeleteDrama..
ReplyDelete