விமானப்படையில் 2 பெண் விமானிகள்
இலங்கை விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று (13) அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சீன விரிகுடாவில் முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அவர்கள் இருவரும், சிறிய ரக விமானங்களை செலுத்துவதற்காக விமானப்படை தலைமையகத்தில் இணைந்துக்கொள்ளப்படவுள்ளனர்
Post a Comment