Header Ads



191 புள்ளிகளைப் பெற்ற மகள் - மகிழ்ச்சியடைய வாப்பா இல்லை

-Mohamed Ismail Rifana-

இழந்து பெற்றது.!

தன் வெற்றியை சுமந்துவரும், மகளின் சந்தோஷத்தில் பங்குகொள்வது பெற்றோர்கள்

அதில் ஒருவரை இழந்த பிள்ளையின் மனநிலையை உரசிப்பார்க்க நினைக்காவிட்டாலும் எமது மனம் சந்தோஷத்திலும் கனத்து நின்றது...

மகரகமையில் மூன்று மாத போராட்டம்.. அதுதான் இவ்வுலக வாழ்வுக்கு முடிவுரை எழுதியது.. வாராந்த விடுமுறையில் வீடு வரும் வாப்பா பிள்ளைகளோடு உறவாடும் அந்தப் பிணைப்பு பெண் என்பதால் அதிகம்தான்.

புலமைப்பரீட்சைக்கு ஆயத்தமாகும் காலத்தருவாயில் வாப்பாவின் பிரிவை ஜீரணித்து பரீட்சைக்குத் தயாராகுவதும் ஒரு பரீட்சைத்தான். குழந்தை உளவியலை அவ்வப்போது உரசிப்பார்க்கவைத்துச் சென்ற சந்தர்ப்பங்கள் அவள் பூவிலும் மென்மை என்பதை உணர்த்தியது.

இறைவன் அருள் 191 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த அவள் குதூகலத்தில் பங்குகொள்ள தந்தையில்லையே என்ற வலி எங்களை வியாபித்திருந்தது...

சித்தியடைந்ததும் அல்ஹம்துலில்லாஹ் எனும் இறை புகழ்ச்சியை உதித்த அவள் ஆத்மீக உணர்வில் அந்த தந்தைக்கும் பங்கு உண்டு...

முகம்மத் ஷிபான் (தாராபுரம் மன்னார்) பாத்திமா உஸ்மா

கடுமையான் குளம் வீதி

புத்தளம்

ஸைனப் பாடசாலை



3 comments:

  1. Mashaallh. All the success in tour studies including Your religious studies.

    ReplyDelete
  2. Allah Akbar. May almighty Allah shower his grace upon this girl to be pious and bold in all her endeavours. Ya Allah! Make her stable psychologically & financially! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.