நாட்டின் மொத்த கொவிட் இறப்புகளில், 5 மட்டுமே கொரோனாவால் ஏற்பட்டவை - இராணுவத்தளபதி
நாட்டின் மொத்த கொவிட்-19 இறப்புகளில் ஐந்து மட்டுமே கொவிட்-19 ஆல் ஏற்பட்டவை எனவும் மற்ற அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும்
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று -12- தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கொவிட் 19 நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின் போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும் என்றார்.
இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை உள்ளது என்றும், யாரும் மறைக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது என்றும் அவர் கூறினார்.
முடக்கல் நிலையில் இருக்கும்போது கூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் நிறுவியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
வைரஸ் பாதித்த அனைவருமே இறந்துவிட மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் அதாவது ஆகக்குறைந்தது 0.2 சதவீதம் பேர் கொவிட் -19 காரணமாக இறந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
then why Sir all bodies are cremating...????
ReplyDelete